ராதாவிடம் அம்பிகா அபேஸ்… அக்காவும் தங்கச்சியும் அடிச்சிக்கிறாங்க!

ராதாவிடம் அம்பிகா அபேஸ்… அக்காவும் தங்கச்சியும் அடிச்சிக்கிறாங்க!
Published on

‘அடுத்த தெருப்ப்பக்கம் போகாத… அங்க அக்காவும் தங்கச்சியும் அடிச்சிக்கிறாங்க’ என்கிற வடிவேலு படத்து நகைச்சுவை காட்சிக்கு பொருட்சுவை கொடுக்கும் விதமாக 46 கோடி மோசடி விவகாரத்தில் நடிகை ராதாவுக்கும் அவரது அக்காள் அம்பிகாவுக்கும் இடையே மோதல் வெடித்து அது காவல்துறை புகார் வரை போயுள்ளது.

80களின் கனவுக்கன்னிகள் நடிகை அம்பிகாவும் ராதாவும். ரஜினி,கமல் படங்கள் தொடங்கி இவர்களது ராஜ்ஜியம் பல வருடங்களுக்கு தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தது. அந்நாளின் முதல்வர் எம்.ஜி.ஆரின் பேரன்பைப் பெற்றவர்களாவும் இவர்கள் படு செல்வாக்காக இருந்தனர்.

ராதா திரைத்துறையிலும் முற்றிலும் ஓய்வெடுக்க அம்பிகா மற்றும் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில்தான் இருவருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.

நடிகை ராதா, சென்னை போரூரில் "RR Gardens" என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறார். தொழில் காரணங்களுக்காக வெளியூர் செல்லும்போது, அவசர பயன்பாட்டிற்காக கையெழுத்திட்ட சில காலியான காசோலைகளை தனது அறையில் வைத்திருப்பது வழக்கம். 2025 ஆம் ஆண்டு "RR Gardens" பெயர் மாற்றப்பட்டதால், ஐடிபிஐ வங்கியிலிருந்து புதிய செக் புக் வழங்கப்பட்டு பழைய செக் புக் பயன்பாட்டில் இல்லாமல் போனது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17ந் தேதி அன்று ஐடிபிஐ வங்கியிலிருந்து ராதாவுக்கு வந்த மின்னஞ்சலில், பயன்பாட்டில் இல்லாத அவரது பழைய 5 காசோலைகள், அக்கா அம்பிகா நாயர் பெயரில் பணமாக்குவதற்காக வங்கியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வங்கியில் தாக்கல் செய்யப்பட்ட 5 செக்குகளின் மொத்தத் தொகை சுமார் ₹43.62 கோடி. உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்து அந்த செக்குகளுக்கான பண பரிவர்த்தனையை ராதா நிறுத்தியுள்ளார்.

அதுகுறித்து வங்கியில் விசாரித்தபோது அந்த பழைய காசோலைகளில் தொகையையும் பெயரையும் நிரப்பியது ராதாவின் சகோதரரான மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே ஃபெமா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வளசரவாக்கத்தில் உள்ள வீட்டின் தரைத்தள பகுதியில் அம்பிகா தங்கியிருந்த சூழலில், ராதா இல்லாத நேரத்தில் அவரது அறைக்குள் புகுந்து, கையெழுத்திட்ட பழைய காசோலைகளை திருடி, சட்டவிரோதமாக பணமாக்க முயன்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்காளும் தங்கையும் அடித்துக்கொள்ளத் துவங்கியிருக்கும் இப்பஞ்சாயத்தை ஒட்டி பல நூறு வீடியோக்களை தேத்திவிடலாம் என்று யூடியூபர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com