சொந்த வீட்டை இலவச பள்ளிக் கூடமாக மாற்றிய ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ்
Published on

நடிகர் ராகவா லாரன்ஸ் தான் முதல் முறையாக கட்டிய வீட்டை இலவச பள்ளிக்கூடமாக தொடங்க முடிவெடுத்துள்ளார்.

நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். ஏழை மாணவர்கள் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் மாற தன்னால் முடிந்ததைச் செய்து உதவுகிறார். அதேபோல் நடிகர் ராகவா லாரன்ஸும் தன்னுடைய மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவி வருகிறார்.

இந்த நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிள்ளது. எப்போது படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினால், அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒரு நல்ல காரியத்திற்கு எடுத்து வைத்துக் கொள்வேன்.

குரூப் டான்ஸராக இருந்தபோது வாங்கிய சம்பளத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மிச்சப்படுத்திய பணத்தை அம்மாவிடம் கொடுத்து, வாங்கிய நிலத்தில் கட்டிய வீடு இது. முதல் முறையாக நான் கட்டிய வீடு. இந்த வீட்டை பசங்களுக்கு கொடுத்துவிட்டு, நாங்கள் வாடகை வீட்டிற்கு சென்றுவிட்டோம். 20 வருடங்களுக்கு முன்பு கொடுத்த இந்த வீட்டை வந்து பார்க்கும் போது ஒரு விதமான உணர்வு தோன்றுகிறது. எத்தனை பசங்க, இங்கு படித்தார்கள், சாப்பிட்டார்கள், இலவசமாக நாம் என்னென்னவோ கொடுக்கிறோம்.

அதோடு கல்வியை இலவசமாக கொடுப்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதனால், நான் கட்டிய இந்த வீட்டை கொஞ்சம் மாற்றம் செய்து, இலவச கல்வி கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதற்காக இந்த வீட்டில் நான் வளர்த்த பெண் இப்போது டீச்சராகிறார். இப்போ அவர்கள் தான் நான் கட்டப் போகும் பள்ளியின் முதல் டீச்சர்.” என்று கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com