சினிமா செய்திகள்

ரஜினி 173 - சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேசனல் தயாரிப்பில், கமல், ஆர்.மகேந்திரன் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், சில காரணங்களால் சுந்தர் இதிலிருந்து விலகினார்.
அதையடுத்து, சிவ கார்த்திகேயனின் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை வைத்து ரஜினியின் இப்படத்தை இயக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.
இன்று காலையில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.