சினிமா செய்திகள்
சன் பிக்சர்ஸ்தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் உரிய அனுமதி இல்லாமல் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்கோவையைப் பயன்படுத்தியதாக பிரச்னை எழுந்துள்ளது. இதுதொடர்பாக இளையராஜாவின் சார்பில் படக் குழுவினருக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அந்தப் படத்தின் நாயக நடிகர் இரஜினிகாந்திடம் கேட்டதற்கு, இது படத் தயாரிப்பாளருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையிலான பிரச்னை என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டார்.