நடிகை ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகர் தனுஷ் 51: ஜோடி யார் என அறிவித்த படக்குழு!

நடிகர் தனுஷின் 51-வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து முடித்திருக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. தனுஷ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

தற்போது, தனது 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, தனுஷ் இயக்கி, நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்தில் தன் 51-வது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பயணம் தொடங்கியுள்ளது என மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாகர்ஜுனா, சாய் பல்லவி, ஆகியோர் நடிக்க உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதபோல், இந்தப் படத்தின் தலைப்பு விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com