12 கோடி சம்பளம்… உதயநிதி வைத்த டெஸ்ட்… த்ரிஷா கொடுத்த ட்விஸ்ட்!

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா
Published on

ஆட்சியைத்தான் பிடிக்க முடியவில்லை, ஆச்சி த்ரிஷாவையாவது கூடுதல் சம்பளம் கொடுத்துப் பிடித்து தமது ரெட்ஜெயண்ட் நிறுவனத்தில் நடிக்கவைத்துவிடலாம் என்கிற முயற்சியில் முன்னாள் துணை முதல்வர் இறங்கியிருப்பதுதான் கோடம்பாக்கத்து ஹாட்.

திமுக ஆட்சிக்கு மக்கள் ஓய்வு கொடுத்திருக்கும் நிலையில் உதயநிதியின் தயாரிப்பு நிறுவனமான ரெட்ஜெயண்டின் தயாரிப்பு பணிகளும் சற்று முடங்கும். கொஞ்ச காலத்துக்காவது ஓய்வெடுத்துவிட்டு பின்னர்தான் தயாரிப்பு பணிகளில் இறங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது. இச்செய்தி ஓரளவு உண்மைதான் என்கிறபோதிலும் ரஜினி, கமலை வைத்து தாங்கள் தயாரிக்கவிருக்கும் மெகா பட்ஜெட் படத்தை மட்டுமாவது சற்றும் தொய்வு ஏற்பட்டுவிடாமல் தயாரித்துவிடவேண்டும் என்பது உதயநிதியின் விருப்பம். அது சினிமாவில் தாங்கள் ஸ்ட்ராங்காக இருப்பதாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் கொஞ்சம் சப்போர்ட்டாக இருக்கும் என்பது உதயநிதியின் மைண்ட்வாய்ஸ்.

‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்திதான் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படும் இப்படத்தின் ஷூட்டிங் இப்போதைக்கு இவ்வருட இறுதியில் தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் கொஞ்சம் எகிற வைக்கும் என்பது உட்பட இன்னும் சில உள்நோக்கங்களுடன் படத்தின் நாயகியாக நடிக்க உதயநிதி தரப்பு த்ரிஷாவுக்கு தூது விட்டதாக சொல்லப்படுகிறது. கமலுக்கு ஜோடியாக ஒரு கேரக்டரில் நடிக்க அவருக்கு ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆஃபரோடு, இதுவரை அதிகபட்சமாக 8 சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவருக்கு ரூ 12 கோடிவரை சம்பளம் தரத்தயார் என்றொரு ஆடி ஆஃபரும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதை புன்முறுவலோடு கேட்டுக்கொண்ட த்ரிஷா, ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. என்னோட ’மேனேஜரை’ கேட்டுச் சொல்றேன் ‘ என்று பதில் சொல்லியிருக்கிறாராம்.

யாருங்க அந்த மேனேஜர் என்று கேட்டு பின்னூட்டங்கள் எதுவும் இடவேண்டாம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com