'கர்ப்பமாக இருக்கிறேன்' - சமந்தா அறிவிப்பு

samantha
நடிகை சமந்தா
Published on

ஹைதராபாத்தில் நடைபெற்ற 'மா இன்டி பங்காரம்' படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது கர்ப்பத்தை உறுதி செய்தார் நடிகை சமந்தா. மேலும், அவர் பணியிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு பணிக்கு திரும்ப இருப்பதாக அறிவித்தார்.

சமந்தாவும் ராஜ் நிடிமோருவும் கடந்த 2025இல் திருமணம் செய்துக்கொண்டனர். அவர்களுக்கு பிறக்கப்போகும் முதல் குழந்தை இது.

ராஜ் நிடிமோர், சமந்தா, ஹிமாங்க் துவ்வுரு தயாரித்துள்ள 'மா இன்டி பங்காரம்' படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார்.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துடைய குடும்பத்திற்கு மருமகளாக செல்லும் சமந்தாவை, முதலில் உதாசீனம் செய்யும் குடும்பத்தினர் பிறகு அவரை ஏற்றுக்கொள்ளும் சமயம் சமந்தாவின் ஃப்ளாஷ்பேக் ஒன்று மொத்தக் குடும்பத்தையும் மரணபயத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. அதுவரை குடும்பப் பெண்மணியாய் வலம் வந்த சமந்தா அந்த எதிரிகளை எப்படியெல்லாம் தீர்த்துக்கட்டுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் சமந்தா கூறியதாவது :

"மன்னிக்கவும் நண்பர்களே! ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நான் திரும்பி வந்துவிடுவேன். நான் இப்போது மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்." என்று கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com