மோகன்லாலுடன் கைகோர்க்கும் சரத்குமார்- புதுப்படத்தின் முக்கியத்துவம்?

சரத்குமார் Sarathkumar
சரத்குமார் Sarathkumar
Published on

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கிய பாத்திரம் ஒன்றில் இடம்பெற்றுள்ளார். 

ஒரு மாதத்துக்கு முன்னர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் இந்தப் படத்துக்கான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. 

பிரதீப் இரங்கநாதன் இயக்கத்தில் வெளியான டியூட் படத்தை அடுத்து, சரத் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.

சரத்குமாரின் நண்பர் மேஜர் இரவி இப்படத்தை இயக்குகிறார்.

இயக்குநர் இரவியும் மோகன்லாலும் இணையும் ஆறாவது படம் இது.

காஷ்மீரின் பெகல்காம் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்துக்கு, பெகல்காம்- ஆப்பரேசன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விரைவில் கூடுதல் விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com