சத்யராஜ்
சத்யராஜ்

பிரதமர் மோடி வேடத்தில் நடிக்கிறாரா சத்யராஜ்?

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சி மீண்டும் தொடங்கியுள்ளது; அதில் மோடியின் வேடத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்கள், நடிகையர் திலகம் சாவித்ரி அம்மாள், சமகாலத்தில் வாழ்ந்துவரும் கிரிக்கெட் ஆட்டக்காரர் தோணி ஆகியோரைப் பற்றிய திரைப்படங்கள் பயோபிக் எனப் புகழ்பெற்று கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் வாழ்க்கையைப் படமாக்கினார், இந்தி நடிகர் விவேக் ஓபராய். ஆனால் அந்தப் படம் அவ்வளவாக எடுபடவில்லை. தொடர்ந்து அடுத்த முயற்சியாக மோடியைப் பற்றி ஒரு படம் உருவாக்கப்படுவதாகவும் அதில் மோடியாக சத்யராஜ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு தரப்பினர் பெரியார் படத்தில் பெரியாராக நடித்தவர், மோடியாக நடிப்பதா என சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இதுகுறித்து ஊடகத்தினர் சத்யராஜிடம் கேட்டதற்கு, “ நானும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். முதலில் தகவல் உறுதியாகட்டும். பிறகு பேசுவோம். பகுத்தறிவாளர் எம்.ஆர்.இராதா பல படங்களில் தெய்வீக வேடங்களில் நடித்திருக்கிறார்.” என்று பதில் அளித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com