“கெனிஷா கடவுள் கொடுத்த கிஃப்ட்” என ரவி மோகன் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
நடிகர் ரவி மோகன், தனது புதிய தயாரிப்பு நிறுவனமான 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்'-ஐ சென்னையில் பிரம்மாண்டமான விழாவில் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் பேசிய ரவி மோகன், "என் சொத்துகள் முடக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி எதுவும் இல்லை. என் உண்மையான சொத்து இங்கு வந்திருப்பவர்கள்தான். காசு, பணம் சம்பாதிப்பதெல்லாம் சொத்து கிடையாது. இந்த அன்பைச் சம்பாதிப்பவன் தான் வாழ்க்கையில் வெற்றியாளன்." என்று உருக்கமாகப் பேசினார்.
இந்த விழா நடப்பதற்கு முழு காரணம் கெனிஷா தான் காரணம் என்று கூறிய ரவி மோகன், "ஒரு மனிதன் ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும் போது கடவுள் ஒரு விஷயத்தை அனுப்புவார். அது காசு, பொருள், வாகனம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த மாதிரி கடவுள் கொடுத்த ஒரு கிஃப்ட் தான் எனக்கு கெனிஷா. நான் யார் என்பதை எனக்கே உணர வைத்தவர் அவர்தான். அவங்களை மாதிரி எல்லோர் வாழ்க்கையிலும் ஒருத்தவங்க இருக்கணும்னு ஆசைப்படுறேன்" என்றார். ரவி மோகனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கெனிஷாவும் கண்கலங்கிப் போனார்.