இயக்குநரும் நடிகருமான சசிக்குமார், நடிகை சிம்ரனுடன் முதல்முதலாக இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்கு தற்காலிகமாக புரொடக்சன் நம்பர் 5 என்று பெயரிடப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் வாரத்தில் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் வரும் கோடையில் இப்படம் திரைக்கு வரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சசிக்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உட்பட்ட பலரும் நடிக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் கூட்டாக இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.