மலையாள நடிகர் ஜெய்ஸி ஜோஸ்
மலையாள நடிகர் ஜெய்ஸி ஜோஸ்

தலைநகரம் -2: தமிழ் சினிமாவிற்கு வரும் மலையாள வில்லன்!

தலைநகரம் – 2 திரைப்படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகர் ஜெய்ஸி ஜோஸ் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார்.

லால், நெடுமுடி வேணு, மனோஜ் கே.ஜெயன், திலகன், சுரேஷ் கோபி, கலாபவன் மணி, ராஜன் பி.தேவ் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தங்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களின் வரிசையில், மேலும் ஒரு பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமான ஜெய்ஸி ஜோஸ், தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து மலையாள சினிமாவின் முக்கியமான நடிகராக உயர்ந்தார். சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஜெய்ஸி ஜோஸ்.

மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜெய்ஸி ஜோஸ், சுந்தர்.சி நடிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘தலைநகரம் 2’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

சென்னையை மையப்படுத்திய கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘தலைநகரம் 2’ படத்தில் வில்லனாக நடிக்கும் இவர், முதல் படத்திலேயே மூன்று கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருக்கிறார். ஜெய்ஸி ஜோஸ் வில்லன் கதாபாத்திரத்தைக் கையாண்ட விதத்தைப் பார்த்து சுந்தர்.சி அவருடைய அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com