சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்க்கும் ‘கிடா’ திரைப்படம் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
அறிமுக இயக்குநர் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கிடா(Goat). இந்தப் படத்தில் ‘பூ’ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
கிராமத்து வாழ்வியலை அழகாகச் சொல்லும் ஒரு அழுத்தமான கலைப் படைப்பாக உருவாகியுள்ள இப்படம் சர்வதேச விழாக்களில் கலந்து கொண்டு உலக சினிமா ரசிகர்களின் மொத்தக் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
சமீபத்தில், இந்தியன் பனோரமா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11 to 20 வரை நடக்கும் 14th இந்திய திரைப்பட விழாவில் (14th Indian film festival of Melbourne) திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் திரைக்கு வராத நிலையில் உலகம் முழுக்க பல திரைப்பட விழாக்களில், இப்படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.