ஹய் திரைப்படத்தின் போஸ்டர்
ஹய் திரைப்படத்தின் போஸ்டர்

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘ஹாய்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on

கவின் – நயன்தாரா இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்துக்கு ‘ஹாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை படக்குழுவினர் இன்று (அக். 8) வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, இப்படத்தின் இயக்குநர் விஷ்ணு எடவன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன், அஜித் குமாரின் விடாமுயற்சி, விஜய்யின் லியோ மற்றும் சிவகார்த்திகேயனின் மதராஸி ஆகிய திரைப்படங்களின் பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com