‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

மூக்குத்தி அம்மன் 2
மூக்குத்தி அம்மன் 2
Published on

நடிகை நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் போஸ்டரை பகிர்ந்த நடிகை நயன்தாரா, ரசிகர்களுக்கு தனது ஆயுத பூஜை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்தப் படம் வெளியானபோது நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க, இரண்டாம் பாகத்தினை சுந்தர் சி இயக்குகிறார்.

இப்பாகத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் நடிகைகள் நயன்தாரா, துனியா விஜய், ரெஜினா கேசண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவில் நடைபெற்றதாகவும் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய படமாகவும் உருவாகவுள்ளதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com