தன்னுடைய புகைப்படங்களை வணிக நோக்கில் அனுமதியின்றி பயன்படுத்தியதாக இந்தி நடிகை ஊர்வசி ரெளத்தெல்லா ரூ.7000 கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.
லெஜண்ட் சரவணனின் லெஜண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இந்தி நடிகை ஊர்வசி ரெளத்தெல்லா. இவர், தன்னுடைய புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஏஐ நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த ஏஐ நிறுவனம், நடிகை ஊர்வசியின் புகைப்படங்களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஒரு தனிநபரின் அனுமதியின்றி, அவரின் அடையாளம், புகைப்படங்கள், வீடியோக்களை வணிக நோக்கில் பயன்படுத்துவது சட்டப்படி தவறானது என்றும், இந்த ஏஐ நிறுவனத்திற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த ஏஐ நிறுவனத்திற்கு எதிராக ரூ.7,000 கோடி இழப்பீடு கோர முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.