வா வாத்தியார் கார்த்தி
சினிமா செய்திகள்
‘வா வாத்தியார்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமானது.
இதனைத் தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து முடித்தார்.
இப்படத்தில் நாயகியாக க்ருத்தி ஷெட்டியும், வில்லனாக சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரணும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
வா வாத்தியாரின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், இன்னும் இப்படம் திரைக்கு வராமல் இருக்கிறது. இந்த நிலையில், இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.