தேசிய விருதுகள்… சில சந்தோஷங்கள், பல ஜலதோஷங்கள் !

Vaazhai, Labbar bandhu
வாழை, லப்பர் பந்து
Published on

அடைமழைவிட்டாலும் செடிமழை நிற்காத கதையாக, தேசிய விருது தொடர்பான பாராட்டு, சீராட்டுகளுக்கு மத்தியில் வசவுகளும், எள்ளல், எகத்தாளங்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக நமது தமிழ் ஜட்ஜ்களை கும்மி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சனியன்று திரைப்படத்துறைக்கான 72வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு தமிழக சினிமா மொத்தம் பத்து விருதுகளை அள்ளியிருந்தது. துவக்கத்தில் அவ்விருதுகளை வென்றவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்க, அடுத்த சில நிமிடங்களிலேயே சட்டென்று மாறியது வானிலை.

அந்த ஆதங்க மனநிலைக்கு முதல் பொட்டு வைத்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ் என்றுதான் சொல்லவேண்டும். தேசிய விருதுகள் விவகாரத்தில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ஒரு வீடியோ பதிவு வெளியிட்டவர் தனது ‘வாழை’ படத்துக்கும் விருது கிடைக்காதது குறித்து ஆதங்கப்பட்டதற்கு பெரும் வரவேற்பு.

அதைத் தொடர்ந்து ‘தங்கலான்’, ‘லப்பர் பந்து’,’ஜமா’,’கொட்டுக்காளி, ‘விடுதலை’ ஆகிய படங்களை விட விருதுபெற்ற ராயனும், கேப்டன் மில்லரும் சிறந்த படங்களா என்று கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ‘தங்கலான்’ விக்ரமை விட ராயன் தனுஷ் எந்த விதத்தில் சிறப்பாக நடித்திருந்தார் ? என்று கேள்விகள் குவிந்தன.

உச்சமாக ஒரு கமெண்ட்,… வழக்கமாக தமிழ்ப்படங்களுக்கு விருது கொடுக்காமல் அவமானப்படுத்துவார்கள். இம்முறை மட்டமான படங்களுக்கு விருதுகள் கொடுத்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இ.வி.கணேஷ்பாபு, கலா மாஸ்டர் போன்றவர்களையெல்லாம் நடுவர்களாகப் போட்டபிறகு நல்ல படங்களுக்கு விருதுகளை எப்படி எதிர்பார்க்கமுடியும் ?

தட்… காக்கா பிரியாணி சாப்பிட்டுவிட்டு உன்னி கிருஷ்ணன் குரலையா எதிர்பார்க்க முடியும் மொமண்ட்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com