கும்கி - 2 படத்தின் கதாநாயகன் யார்?

கும்கி
கும்கி
Published on

கும்கி - 2 திரைப்படத்தின் கதாநாயகன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2012 இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது, 13 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் அறிமுக நடிகர் மதி கதாநாயகனாக நடிக்க நடிகர் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பென் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com