இளையராஜா – பாலச்சந்தர் பிரிந்தது ஏன்? - கவிதாலயா கிருஷ்ணன்

கவிதாலயா கிருஷ்ணன்
கவிதாலயா கிருஷ்ணன்
Published on

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இசைஞானி இளையராஜா – இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரும் பிரிந்ததற்கு ‘இதுதான் காரணம்’ என பலரும் சொல்வதுண்டு. ஆனால், என்ன நடந்தது என்பது குறித்து கவிதாலயா கிருஷ்ணன் அந்திமழைக்கு கொடுத்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்:

“இளையராஜாவுக்கும் – பாலசந்தருக்கும் எந்த முரணும் கிடையாது. பாலச்சந்தர் குறித்து இளையராஜா ஏதோ சொன்னதாக யாரோ இவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதை பாலச்சந்தர் நம்பிவிட்டார்.

சிந்து பைரவி படத்திற்காகத்தான் இளையராஜா தேசிய விருது வாங்கினார். பிறகு கார்த்தியை வைத்து ஒரு படம் எடுத்தார் பாலச்சந்தர். அந்த படத்துக்கு ரீ ரெக்கார்டிங் செய்ய மறுத்துவிட்டார் இளையராஜா. அப்போது அவருக்கு நேரம் இல்லை. பழைய டிராக்கை மிக்ஸ் பண்ணி ரிலீஸ் பண்ணிடுங்க என பாலச்சந்தர் சொல்லிவிட்டார். இதனால் சின்ன மனஸ்தாபம் இருந்ததாக சொல்வார்கள்.

கவிதாலயா கிருஷ்ணன்
கவிதாலயா கிருஷ்ணன்

கவிதாலயா தயாரிப்பான அண்ணாமலை படத்தின் போது, இளையராஜா வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டிருக்கிறார். அதேபோல், ரோஜா படத்தின் போதும் மணிரத்னமும் இளையராஜா வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். அதற்கு பிரமிட் நடராஜன், ”பாலச்சந்தருக்கு ராஜா செட்டாகாதுனு” சொல்லியிருக்கிறார். ”அவருக்குப் பிடிக்கவில்லை என்றால், யாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்” என சொல்லிவிட்டார் ரஜினிகாந்த். அதனால், அண்ணாமலை படத்துக்கு தேவாவும், ரோஜா படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானும் இசையமைத்தனர்.

‘வானமே எல்லை’ படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்ததது. அப்போது ரோஜாவுக்காக ’சின்ன சின்ன ஆசை’ பாடலை ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துவிட்டார். அந்த பாடல் கேசட் வாங்குவதற்காக என்னை சென்னைக்கு அனுப்பினார்கள். நான்கு நாள் ரஹ்மான் ஸ்டூடியோவில் காத்துக்கிடந்தேன். அதன்பிறகுதான் ரஹ்மான் அந்த பாடல் கேசட்டை என்னிடம் கொடுத்தார். அதைக் கொண்டுபோய் பாலச்சந்தர் சாரிடம் கொடுத்தபோது, ’ஏண்டா இவ்வளவு லேட்’ என கடிந்து கொண்டார். பாடலை இரண்டு மூன்று முறை கேட்டவர், ரஹ்மானிடம் பேச வேண்டும் என்றார். உடனே நகருக்குள் போய் ரஹ்மானுக்கு டெலிபோனில் கால் செய்தோம். ”song of the decade” என ரஹ்மானை பாராட்டியவர், “Some day i will use you man” என்றார் பாலச்சந்தர். அது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.” என்கிறார் கவிதாலயா கிருஷ்ணன்.

வீடியோ நேர்காணல் இணைப்பு:

logo
Andhimazhai
www.andhimazhai.com