பாரி இளவழகனின் 'அன்பே டயானா' திரைப்படம் ஐந்து நாளில் 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
'அன்பே டயானா'வின் இயக்குநராகவும், நடிகராகவும் பாரி இளவழகன் வலம் வருகிறார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியானது.
ரோஜா, சேத்தன், ரம்யா ரங்கநாதன், 'பரிதாபங்கள்' கோபி ஆகியார் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எழுத்தாளர் கரன் கார்க்கி எழுதிய 'சட்டைக்காரி' என்ற நாவலைத் திருடி இந்தப் படம் எடுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சர்ச்சையான நிலையில், இரண்டு கதைகளும் வேறுவேறு தான் என்று எழுத்தாளர் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து படக்குழு, "தமிழகம் முழுவதும் கடந்த 5 நாள்களில் 2.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் 'அன்பே டயானா' படத்தைப் பார்த்துள்ளனர். அபரிதமான அன்பு, ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.” என சமூக ஊடகங்களில் கேட்டுக்கொண்டுள்ளது.