கருத்த மச்சான்....! ரீல் உலகத்தையும் விட்டு வைக்காத ராஜா!

இசையமைப்பாளர் இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா
Published on

பழைய படங்களில் பிரபலமடைந்த பாடல்களின் ஓரிரு வரிகளை தற்போது வெளியாகும் படங்களில் ஆங்காங்கே முக்கிய காட்சிகளில் ஓடவிட்டு காட்சிகளுக்கு சுவையூட்டும் நிகழ்வுகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இந்த சுவையை மேலும் அதிகமூட்டுகின்றனர் இன்ஸ்டா பிரபலங்கள்.

இப்போது அவர்கள் மையம் கொண்டிருப்பது ’டியூட்’ படத்தில் வரும் ‘கருத்த மச்சான்’ பாடலில். இது இளையராஜா இசையமைத்த பாடல். இப்படி ஏராளமான அவரின் பாடல்கள் மீண்டும் அசைபோடப்படுகின்றன.

படக்குழுவினர் இளையராஜாவிடம் அனுமதி பெற்றுத்தான் பாடலை பயன்படுத்துகிறார்களா, இல்லை?, காப்புரிமைக்காக அவர் நீதிமன்றம் செல்வது சரியா, தவறா…? என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

கடந்த சில ஆண்டுகளில் எத்தனை இளையராஜா பாடல்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு மீண்டும் ஹிட்டாகின என்று பார்ப்போம்.

சுப்ரமணியபுரம் – பொதுவாக என் மனசு தங்கம், தோட்டம் கொண்ட ராசாவே

நாடோடிகள் – அந்த வானத்தம் போல மனம் படைச்ச, சிறுபொன்மணி

சூப்பர் டீலக்ஸ் - அந்தியில வானம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் – ஆப்பக்கடை அன்னக்கிளி, ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்

96 – யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே

மஞ்சுமெல் பாய்ஸ் – கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

மார்க் ஆண்டனி – பஞ்சு மிட்டாய் சேலை கட்டி

கைதி - ஆசை அதிகம் வச்சி

கோட் (GOAT) – சொர்க்கமே என்றாலும், காதலின் தீபம் ஒன்று

குட் பேட் அக்லி - இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி

மெய்யழகன் – இந்த மான் எந்தன் சொந்த மான்

லப்பர் பந்து - நீ பொட்டு வச்ச தங்க குடம்

படை தலைவன் - நீ பொட்டு வச்ச தங்க குடம்

வாழை - மஞ்சள் பூசும்

மாரீசன் - நேத்து ஒருத்தர

ரெட்ரோ - செனோ ரீட்டா ஐ லவ் யூ

மிஸஸ் அண்ட் மிஸ்டர் - ராத்திரி சிவராத்திரி

கூலி - வா வா பக்கம் வா, லைலா பெயரு

தண்டகாரண்யம் - ஓ பிரியா பிரியா

டியூட் – கருத்த மச்சான், நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும்

இந்த பாடல்களுக்கென்று தனி ப்ளேலிஸ்ட் ஒன்றை உருவாக்கி கேட்டு மகிழுங்கள்...!

logo
Andhimazhai
www.andhimazhai.com