கன்னட சூப்பர் ஸ்டாரின் படத்தை இயக்கும் இளம் தமிழ் இயக்குநர்!

சிவராஜ் குமார்
சிவராஜ் குமார்
Published on

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமாரின் அடுத்த படத்தை கார்த்திக் அத்வைத் இயக்க உள்ளார். இவர், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தை இயக்கியவர்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுதீர் சந்திர பாதிரியுடன் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். சிவராஜ் குமாரின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் எஸ்சிஎஃப்சியின் இந்த பான் இந்தியா திரைப்படத்தை விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தை இயக்கிய கார்த்திக் அத்வைத் இயக்குகிறார்.

மிகப் பெரிய பொருட்செலவில், வலுவான தொழில்நுட்ப கூட்டணியுடன் உருவாகும் இத்திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்தியத் திரைப்படத் துறையை சேர்ந்த பிரபல நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள். இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com