சினிமா செய்திகள்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ‘ஆனந்தி பிலிம்ஸ்’ அதிபர் வி.நடராஜன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70.
சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவருக்கு, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதில், உயிரிழந்தார்.
ஜெயலலிதா நடிக்க பி.லெனின் இயக்கிய ‘நதியைத்தேடி வந்த கடல்’, மகேந்திரன் இயக்கி இரஜினிகாந்த் நடித்த ‘முள்ளும் மலரும்’, ஆர்.சி.சக்தி இயக்கிய சிறை, பிரபுவுடன் ரகுவரன் நடித்த கலியுகம், பிரபுவின் உத்தம புருஷன், தர்மசீலன், ராஜா கையை வெச்சா, சத்யராஜ் நடித்த பங்காளி, விஜயகாந்தின் சின்னக்கவுண்டர்,
பாரதிராஜா இயக்கிய சிவாஜியும் பிரபுவும் இணைந்து நடித்த ‘பசும்பொன்’, போன்ற படங்களை தயாரித்தவர் ஆனந்தி பிலிம்ஸ் வி.நடராஜன்.
மறைந்த நடராஜனுக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.