சினிமா செய்திகள்

அரசியலுக்குப் போனாலும் நடிப்பைக் கைவிட்டுவிடாத கமல் ஹாசன், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும், இரஜினி இரசிகர்களுக்கு இனிப்பான தகவல் இது!
கமலின் இராஜ்கமல் பிலிம் இண்டர்னேசனல் நிறுவனத்தின் தயாரிப்பில், இரஜினிகாந்தின் 173ஆவது படம் வெளிவரவுள்ளது.
சுந்தர் சி இப்படத்தை இயக்குகிறார் என்பது கூடுதல் தகவல்.
கலகலப்பு, கிளுகிளுப்புக்குப் பேர்போன சுந்தர் சி, இரஜினிகாந்தை நாயகனாக வைத்து அருணாச்சலம் படத்தை இயக்கியிருக்கிறார்.
அதையடுத்து இருவரும் இணையும் படம், இது.
இராஜ்கமல் நிறுவனத்தின் 44ஆவது ஆண்டில் இந்தப் படம் உருவாவது முக்கியமானது என்றும் கமல் தன் சமூக ஊடகப் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம் என்றும் இரஜினியை நோக்கிக் கூறுவதாகவும் பதிவுசெய்துள்ளார்.