சினிமா செய்திகள்

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் கசிந்த விவகாரத்தில் 6 பேரை இணையக்குற்றத் தடுப்பு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கைதானவர்கள் யார், எந்தத் தரப்பினர் என பரவலாக கேள்விகள் எழுந்துள்ளன.
விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இப்படம் தொடர்பான 300 இணைப்புகளைத் தடுக்க கோரிக்கைகள் வந்துள்ளன என்றும் சட்டவிரோதமான காணொலி மேலும் பரவாமல் தடுக்க தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இணையக் குற்றத்தடுப்பு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.