ஜி.வி.பிரகாசின் புதிய படம் அறிவிப்பு- 11 ஆண்டுகளுக்குப் பின் அப்பாஸ்!

ஜி.வி.பிரகாசின் ஹேப்பி ராஜ் திரைப்படம்
ஜி.வி.பிரகாசின் ஹேப்பி ராஜ் திரைப்படம்
Published on

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. 

படத்தை இயக்குபவர் மரியா இராஜா இளஞ்செழியன். இவர், லவ் டுடே படத்தில் பிரதீப் இரங்கநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 

இப்படத்தில் ஸ்ரீ கௌரிப்ரியா பிரகாசின் ஜோடியாக நடிக்கிறார். 

பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு அப்பாஸ் இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ்ப் படவுலகில் முக்கிய கவனம் கொண்ட பாத்திரத்தை ஏற்கிறார். 

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்துக்கு ஹேப்பிராஜ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com