கர்நாடகத்தில் கமல் நடித்த தக் லைஃப் படத்தைத் திரையிட விடமாட்டோம் என அங்கு பிரச்னை செய்துவருகிறார்கள்.
அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னாவும் கமல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வற்புறுத்தினார். இதற்குக் காரணமே, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தொடுத்த வழக்குதான்!
இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் கமலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது.
அதைத் தொடர்ந்து, இன்று நீதிமன்ற விசாரணையில் கமல் தரப்பில் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
" கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை நிறுத்துவதோ தள்ளிப்போடுவதோ இரு மாநில திரைத்துறையினர் இடையிலான ஒற்றுமையை முற்றிலுமாக சீர்குலைக்கும். அண்டை மாநிலங்களான நாம், எல்லா வகையிலும் ஒருவரையொருவர் சார்ந்தே இயங்குகிறோம்; ஆகவே தக் லைஃப் படத்தை சுமூகமான முறையில் வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.