பாண்டியராஜனுக்காக இயக்குநர் கே.பாலச்சந்தர் வைத்த படத்தலைப்பு!

Published on

நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜனை வைத்து இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் ஒரு படத்தை இயக்க முடிவெடுத்ததும் அதற்கு ஒரு பெயரையும் அவர் தயாராக வைத்திருந்ததும் இப்போது தெரியவந்துள்ளது.  

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:

” ஞானபீட விருதினைவாழ்த்த வந்திருந்தார்நடிகர் பாண்டியராஜன்

அவர்நடிப்பும் துடிப்பும்பிடிக்கும் எனக்கு

ஒரு தேநீர் அருந்தும் நேரம்உரையாடலுக்கு ஒதுக்கினோம்

இதுவரைஅவருக்குச் சொல்லாதஒரு கதை சொன்னேன்

"ஆண்பாவம் வெளிவந்துஉங்கள் புகழ்பரவத்தொடங்கியிருந்த நேரம்

பாலசந்தருக்குப் பாட்டெழுதக் கவிதாலயா சென்றிருந்தேன்

‘உங்களுக்குப் பாண்டியராஜனைத்தெரியுமா’ என்றார் பாலசந்தர்

‘தெரியும்; நல்ல பையன்’ என்றேன்

‘அவருக்குஒரு கதை வைத்திருக்கிறேன்;அவர்தான் பொருத்தமானவர்;அழைத்துவர முடியுமா’ என்றார்

‘உறுதியாக’ என்றேன்

அதன்பிறகு என்ன காரணமோஅது நின்றுபோனது" என்று சொல்லிமுடித்தேன்

"படமே எடுக்கவேணாம் கவிஞரேபாலசந்தர் என்னைநெனச்சதே போதும்"என்றவர் கண்களில்நீர்க்குடம் நிறைந்தது

அந்தக் கதைக்குஅவர்வைத்த தலைப்பைமட்டும்என்னால் மறக்கமுடியவில்லைபாண்டியராஜன்!

கூடாரமடித்து நெஞ்சில் குடியிருக்கிறது

’அவனுக்காக மழை பெய்கிறது’. “

logo
Andhimazhai
www.andhimazhai.com