சினிமா செய்திகள்
கவிஞரும் திரைப்பட இயக்குநருமான சீனு இராமசாமி தன் மனைவியுடனான மணமுறிவை அறிவித்துள்ளார்.
தன் சமூக ஊடகப் பக்கத்தில் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில்,
”அன்பானவர்களுக்கு வணக்கம்.
நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்.
இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம்.இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.
அன்புடன்
சீனு ராமசாமி.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.