மு.க.ஸ்டாலினுடன் ’வித் லவ்’ படத் தயாரிப்பாளர்கள் சந்திப்பு!

மு.க.ஸ்டாலினுடன் ’வித் லவ்’ படத் தயாரிப்பாளர்கள் சந்திப்பு!
Published on

திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் முதல்மைச்சர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சியோன் பிலிம்ஸ் சார்பில் இரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் இந்தப் படம் உருவானது. பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

இந்த மகிழ்ச்சியை முதலமைச்சருடன் தயாரிப்பாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அவர்களுடன் முதலமைச்சர் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார்.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள இப்படம், இன்றைய இளைஞர்களின் உலகம், அவர்களின் உணர்வுகள் மற்றும் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 

‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லலால் கவனம் ஈர்த்துள்ளார்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com