லைக்காவுக்கு விஷால் ரூ.21 கோடி தர உத்தரவு!

நடிகர் விஷால்
நடிகர் விஷால்
Published on

லைக்கா திரைப்பட நிறுவனத்துக்கு நடிகர் விஷால் 21 கோடி ரூபாயை வட்டியுடன் செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் விஷால் தன்னுடைய படத் தயாரிப்புக்காக வட்டித் தொழிலதிபர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியிருந்தார். அதை அவர் கட்ட முடியாததால் அவருக்கு லைக்கா தொகை வழங்கி, அந்தக் கடனை விஷால் அடைத்தார்.

லைக்காவுக்கு விஷால் தரவேண்டிய அந்தத் தொகையை உரிய காலத்தில் அவர் திருப்பித் தரவில்லை. இதற்காக விஷால் மீது லைக்கா வழக்கு தொடுத்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியது.

லைக்காவிடம் வாங்கிய 21.29 கோடி ரூபாயை 30 சதவீத வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com