நடிகர் கமல்ஹாசன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தம வில்லன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக ஏற்கனவே கூறியபடி, 30 கோடியில் மீண்டும் ஒரு படத்தை செய்து தருவதாக கமல்ஹாசன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் உத்தரவாதக் கடிதம் அளித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு கமல் ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் அளித்த உத்திரவாதப்படி எங்களுக்கு விருப்பமான கதையில் நடித்து தயாரித்து தருவதற்கு கால்ஷீட் பெற்று தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் உத்தரவாத கடிதம் அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இதுவரை தங்களுக்கு விருப்பமான கதையில் தயாரித்து நடித்துக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது.