விஜய்க்கு வாழ்த்து, திமுக, அதிமுகவுக்கு சாத்து…மாஸ் பண்ணிய பா. ரஞ்சித்

விஜய்க்கு வாழ்த்து, திமுக, அதிமுகவுக்கு சாத்து…மாஸ் பண்ணிய பா. ரஞ்சித்
Published on

ரஜினி, கமல் தொடங்கி பான் இந்தியா நட்சத்திரங்கள் வரை சகலரும் விஜய்யின் வெற்றிக்கு தொடர்ச்சியாக வாழ்த்துப் பதிவுகள் போட்டுவரும் நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தனக்கே உரிய தனித்துவமான ஸ்டைலில் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

- நீலம் பண்பாட்டு மைய நிறுவனரும், இயக்குநருமான பா. இரஞ்சித் விஜய்க்கு பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில்,…

சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.

மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள்.

என்று தெரிவித்திருக்கிறார்.

பா. ரஞ்சித்தின் இந்த வாழ்த்துச் செய்தியில் ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது என்று கூறியிருப்பது திராவிட கட்சிகள் காலகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தியதை கடுமையாக சாடுவதாகும்.

இந்த வாழ்த்துச் செய்தியின் பின்னூட்டங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் போன்ற தலைவர்கள் கூட பொதுத் தொகுதிகளில் பட்டியல் இனத்தவரை நிறுத்த முன்வராத நிலையில், விஜய் துணிந்து பல பொதுத் தொகுதிகளில் பட்டியல் இன மக்களை, குறிப்பாக பணபலமே இல்லாத எளிய மனிதர்களை நிறுத்தி வென்றிருப்பது நிச்சயம் ஒரு மெச்சத்தக்க முன்னெடுப்புதான் என்று பாராட்டி வருகின்றனர்.

படத்துல மட்டுமில்ல ஒரு வாழ்த்துச் செய்தியா இருந்தாலும் அதுலகூட பஞ்ச் வைப்போம் என்கிறார் பா.ரஞ்சித்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com