நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்!

நயன்தாரா - சிவி சண்முகம்
நயன்தாரா - சிவி சண்முகம்
Published on

நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டதாகவும், எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எதிராக திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என கூறினார். ஆனால் முதல்வர் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கூறுகிறார். “நயன்தாரா” வேண்டும் என்றால் முதல்வர் நிறைவேற்றுவாரா. “நயன்தாராவை” திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள் முதல்வர் நிறைவேற்றுவாரா.? என்று கேள்வி எழுப்பினார். ஆட்சி போன பிறகு கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என கூறுகிறார். 5 ஆண்டுகள் என்ன செய்தார் முதல்வர் என தரம் தாழ்ந்த வகையில் பேசினார்.

அவரது கருத்துக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சிவி சண்முகம் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் “ஸ்டாலினின் கனவு கூறுங்கள்” என்ற ஏமாற்று வேலை குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த வார்த்தை முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டு விட்டது. எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி உள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com