அரிசி திரைப்படத்தில்   முத்தரசன்
அரிசி திரைப்படத்தில் முத்தரசன்

திரைப்படத்தில் நடிக்கும் சி.பி.ஐ. கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன்!

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களத்தில் தயாராகும் திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நடிக்கிறார்.

புதுமுக இயக்குநர் எஸ்.ஏ. விஜயகுமார் இயக்கும் திரைப்படம் 'அரிசி'. விவசாயிகளின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்டதாக இந்தத் திரைப்படம் உருவாக்கப்படுகிறது.

இந்தப் படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நடிக்கிறார். அவர் நடித்துள்ள காட்சிகளின் படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

இளையராஜா இசையமைக்கும் இந்தப் படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com