அல்போன்ஸ் புத்திரனை ஆறுதல் படுத்தும் விதமாக சுதா கொங்கரா ட்வீட்
அல்போன்ஸ் புத்திரனை ஆறுதல் படுத்தும் விதமாக சுதா கொங்கரா ட்வீட்

“டியர் அல்போன்ஸ் புத்திரன்…”வைரலாகும் சுதா கொங்கராவின் ட்விட்டர் பதிவு!

மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனை ஆறுதல் படுத்தும் விதமாக இயக்குநர் சுதா கொங்கரா பதிவிட்ட ட்விட்டர் பதிவு சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.

மலையாள இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் நேரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அவர் இயக்கிய மலையாள படமான பிரேமம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் கிப்ஃட் எனும் படத்தினை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “சினிமா திரைப்படங்களை இயக்குவதில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஏ.எஸ்.டி (Autism Spectrum Disorder) உள்ளதை நானே நேற்றுதான் கண்டறிந்தேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் தொடர்ந்து பாடல், விடியோக்கள், குறும்படங்கள் மற்றும் முடிந்தால் ஓ.டி.டி.யில் படங்களை இயக்குவேன்” என பதிவிட்டு பின்னர் நீக்கியிருந்தார்.

அவரை ஆறுதல்படுத்தும் விதமாக இயக்குநர் சுதா கொங்கரா தனது ட்விட்டர் பதிவில், “டியர் அல்போன்ஸ் புத்திரன், நான் உங்களது சினிமாக்களை மிகவும் மிஸ் செய்யப் போகிறேன். பிரேமம் படம் எனக்கு எப்போதும் பிடித்த படங்களின் வரிசையில் இருக்கும்.

நான் சோர்வாக இருக்கும்போதெல்லாம் என்னை உயிர்ப்புடன் வைக்கும் படமும் அதுவே. நான் அந்தப் படத்தினை பலமுறை தொடர்ந்து பார்த்துள்ளேன். காதலில் இருப்பது என்ற யோசனையின் மீது மீண்டும் காதல் கொள்ளச் செய்கிறது. தயவுசெய்து எந்த வடிவிலாவது சினிமாவை தொடருங்கள்; நான் ரசித்துக் கொள்கிறேன். அன்புடன் சுதா” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com