2ஆவது குழந்தைக்கு தந்தையாகும் இயக்குநர் அட்லி!

இயக்குநர் அட்லி தனது மனைவி, மகனுடன்
இயக்குநர் அட்லி தனது மனைவி, மகனுடன்
Published on

இயக்குநர் அட்லி தன் மனைவி கருவுற்றிருக்கும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து பின்னர் நடிகர் விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி.

நடிகை பிரியாவை காதலித்து வந்த அட்லி கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் அவரும், அவரது மனைவி பிரியாவும் கவனம் செலுத்தி வருகின்றனர். பிரியா அட்லி இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குநர் அட்லி தன் மனைவி கருவுற்றிருக்கும் தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அட்லி தனது இன்ஸ்டா பதிவில் “எங்கள் புதிய உறுப்பினரின் வருகையால் எங்கள் வீடு இன்னும் இனிமையானதாக மாறப்போகிறது! ஆம்! என்னுடைய மனைவி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும், அன்பும், பிரார்த்தனைகளும் தேவை. அன்புடன் அட்லீ, பிரியா, மீர், பெக்கி, யூகி, சோக்கி, காபி மற்றும் கூபி” என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து

logo
Andhimazhai
www.andhimazhai.com