விஜய்யிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கும் இயக்குநர் சேரன்

விஜய்யிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கும் இயக்குநர் சேரன்
Published on

நாம் தமிழர் சீமானுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தள பதிவில் தவெக தலைவர் விஜய்யிடம் பகிரங்க மன்னிப்பு கோரியிருக்கிறார்.

சில வருடங்கள் திரைத்துறையில் டல்லடித்து வந்த இயக்குநர் சேரன் வேறு வழியின்றி, பாமக தலைவர் ராமதாஸின் பயோபிக்கை இயக்கத் தயாராகி வந்தார். சின்ன டாக்டர், பெரிய டாக்டருக்கிடையே பெரும் மோதல் ஏற்பட்ட நிலையில் அப்படம் டிராப் ஆகிவிட தற்காலிகமாக நாம் தமிழர் சீமானுடன் கூட்டு சேர்ந்த சேரன் அவருக்காக தீவிர பிரச்சாரமும் மேற்கொண்டார்

விஜய்க்கு ஆதரவான அலையில் சீமான் கட்சி படுதோல்வி அடைய, இன்று தனது எக்ஸ் தளப் பதிவில்,…

சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் திரு @actorvijay@TVKVijayHQ

அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்.. உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான்... எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி.. அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன்.. தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்... என்று மிக வெளிப்படையாக தனது செயலுக்கு வருத்தம் தெரித்திருக்கிறார்.

அப்பதிவில்,... எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி... என்று தனது திமுக எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளார் சேரன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com