அஜித் குமார் - வெங்கட் பிரபு சந்திப்பு
அஜித் குமார் - வெங்கட் பிரபு சந்திப்பு

இப்போ விஜய்… அடுத்து அஜித்தா…?

நடிகர் அஜித் குமார் இயக்குநர் வெங்கட் பிரபு சந்திப்பு குறித்து சினிமா ரசிகர்கள் பல்வேறு யூகங்களை முன்வைத்து வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில், விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

தற்போது, அப்படப்பிடிப்புக்காக நடிகர் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜானில் உள்ளனர்.

அதேநேரம், நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு அஜர்பைஜானில் நடிகர் அஜித் குமாரைச் சந்தித்துள்ளார். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, “கடைசியாக இது நடந்துவிட்டது. ப்ரொமன்ஸ்'. என்று பதிவிட்டுள்ளார்.

திடீரென இருவரும் சந்தித்துக் கொண்டது ரசிகர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த சந்திப்பு மங்காத்தா 2 படத்திற்காக இருக்கலாம் என்றும் கோட் படத்தில் அஜித்தையும் கேமியோ ரோலில் நடிக்க வைக்க வெங்கட் பிரபு முயற்சிக்கலாம் என்றும் பேசப்பட்டன. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் இது அடுத்த படத்துக்கான சந்திப்பாகத்தான் இருக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com