இந்தியன் -2 போஸ்டர்
இந்தியன் -2 போஸ்டர்

பா.ஜ.க.வின் குரலை பிரதிபலிக்கிறதா இந்தியன் -2 போஸ்டர்?

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் - 2 திரைப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இந்தியன் – 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிகை பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாடல் மே 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியன் தாத்தாவான கமல்ஹாசன் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக கையில் வாக்களித்த அடையாள மையுடன் இருக்கிறார்.

மேலும், ஒரே இந்தியா, ஒரே தேர்தல், ஒரே குரல் என்ற வாக்கியமும் இடம்பெற்றுள்ளது. இது பா.ஜ.க.வின்”ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே சட்டம்” என்ற கோஷத்தை பிரதிபலிப்பதாக பலரும் கருதுகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com