வரலட்சுமி
வரலட்சுமி

போதைப் பொருள் வழக்கு; வரலட்சுமி நேரில் ஆஜராக என்ஐஏ சம்மன்!

போதைப் பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றச்சாட்டில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளர் என்பதும், போதைப் பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை சினிமாவில் ஆதிலிங்கம் முதலீடு செய்துள்ளது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆதிலிங்கம் குறித்த தகவல்களை திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை விசாரணைக்கு ஆஜராக என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது.

தற்போது ஆந்திரத்தில் படப்பிடிப்பில் இருப்பதால், உடனடியாக விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று வரலட்சுமி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com