என் உயிர்த் தோழன்
என் உயிர்த் தோழன்

என் உயிர்த் தோழன் பாபு காலமானார்!

விபத்து காரணமாக நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த ‘என் உயிர்த் தோழன்’ பாபு உடல் நலக்குறைவால் காலமானார்.

இயக்குநர் பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் பாபு. இதனையடுத்து விக்ரமனின் பெரும்புள்ளி, பீம்சிங் இயக்கத்தில் தாயம்மா உள்ளிட்ட நான்கைந்து படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் மாடியிலிருந்து கீழே குதித்தபோது அவருக்கு முதுகில் அடிபட்டு எலும்புகள் உடைத்துவிட்டன. இதனால், அவர் படுத்த படுக்கையிலேயே தொடர் சிகிச்சை பெறவேண்டி இருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாபுவின் உடல்நிலை மோசமடைய சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பாபுவின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர், ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com