நடிகர் ரஜினியின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநர் சங்கத்திற்கு ஒவ்வொரு வருடமும் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதற்கடுத்து ’வை ராஜா வை’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
கடைசியாக, ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படம் வெளியானது. இந்தப் படம் இன்னும் எந்த ஒரு ஓடிடியிலும் வெளியாகவில்லை.
இந்தநிலையில்,இயக்குநர்கள், உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 லட்சம் கல்வி உதவி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
இதற்கான முதற்கட்டமாக 2024ஆம் ஆண்டிற்கு நேற்று ரூ.5 லட்சத்தை சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமாரிடம் வழங்க செயலாளர் பேரரசு , பொருளாளர் சரண் , பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
நிர்வாகிகள் இயக்குநர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.