வசந்த் எஸ் சாய்
வசந்த் எஸ் சாய்

சிவரஞ்சனியின் ஓட்டம்!

சிவரஞ்சனியும் சில பெண்களும்... இது சோனி லைவில் இயக்குநர் வஸந்த் எஸ் சாய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம். மூன்று பெண்களின் கதையை அழுத்தமாகவும் தெளிவாகவும் சொல்லிய படம். இதற்காகவே பல்வேறு தரப்பில் பாராட்டுகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது. ஸ்வீடன் திரைப்படவிழாவில் கலந்துகொண்ட் முதல் தமிழ்ப்படம்! ஜப்பானில் நடந்த திரைப்பட விழாவில்  விருது வாங்கிய இரண்டாவது இந்தியப் படமும் இதுதான்! அமெரிக்காவில் ஐந்து நகரங்களில் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருது... வஸந்திடம் இந்த படத்தைப் பற்றி பேசினோம்.

‘‘பெண்களை மையப்படுத்தி, அவர்களின் பிரச்னைகளைப் பேசும் படம் பண்ண வேண்டும் என்று ரொம்பநாளாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். அதை ஒரு ஆந்தாலஜியாகப் பண்ணவேண்டும் என முடிவெடுத்து அதற்காக அசோக மித்ரனின் விமோசனம், ஜெயமோகனின் தேவகி சித்தியின் டைரி ஆகிய கதைகளைத் தேர்வு செய்துவிட்டேன். மூன்றாவது கதையாக என் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டிருந்தேன். முதல் இரண்டு கதைகளையும் படப்பிடிப்பு முடித்து படத்தொகுப்பு செய்துகொண்டிருந்தேன். அப்போது மூன்றாவது           எடுத்தோம். ஸ்கூல் வேனை ஓடிவந்து பிடித்து சாப்பாடு கொடுப்பார் லட்சுமிப்ரியா. அவர் நிஜமாகவே தமிழக அணிக்காகவெல்லாம் கிரிக்கெட் ஆடியவர். அதனால் அவருக்கு ஓடுவதெல்லாம் ஒன்றும்  சிரமமில்லை. அதனால்தான் அவங்களை சிவரஞ்சனி பாத்திரத்துக்கு தேர்வு செய்திருந்தேன். ஆனால் நான் தான் நினைத்தது வரவேண்டும் என்பதற்காக அந்த ஷாட் மட்டும் ஒரு நாள் முழுக்க பத்துமுறை எடுத்தேன். அவரும் பொறுமையாக ஒத்துழைப்புக் கொடுத்து நடித்துக் கொடுத்தார். அந்த கதையில் அந்தக் காட்சி மிகப்பிரமாதமாக அமைந்துவிட்டது! நிஜமாகவே ஒரு ஓட்டப்பந்தய வீரராக இருந்தால்தான் அப்படி ஓட முடிந்தது. நான் எந்த விதத்திலும் அதை வேகப்படுத்தவில்லை! அவங்களுடைய ஒரிஜினல் வேகம்தான் அது! இந்த படத்தைப் பொருத்தவரை நான் எதிர்பாராதது கொரோனா பெருந்தொற்று. 2018&இல் இதை மும்பை திரைப்படவிழாவில் திரையிட்டபோது பாலின சமத்துவத்துக்கான விருது கிடைத்தது. அதுபோல்பல விருதுகள் பெற்றிருக்கிறது! 2019 முழுக்க அதை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டு 2020இல் திரையரங்குகளுக்கு வெளியிடலாம் என்றால் பெருந்தொற்று பரவல். எப்படியும் திரையரங்குகளில்தான் வெளியிடவேண்டும் என உறுதியாக இருந்தேன். ஆனால் நடக்கவில்லை. சரி என்று 2021 இல் வெளியிடலாம் என்று நினைத்தபோது இரண்டாவது அலை வருது. சரின்னு ஓடிடில கொடுத்திட்டேன். அப்ப இரண்டு வாரம் கழித்து தியேட்டர் திறந்திடுறாங்க.. விதி ஓரமா நின்னு சிரிக்கிதுன்னு நினைச்சிகிட்டேன்.. ஆனால் எனக்கு வருத்தமில்லை.. ஒடிடில கிடைச்ச வரவேற்பு எல்லாத்தையும் மறக்க வெச்சுச்சு. இதற்கு ஊடகங்களும் மிக பிரமாதமான வரவேற்பு கொடுத்திருக்காங்க

விமோசனம் கதையில் கணவனைப் பற்றிய பயத்தை தன்னுடைய முகத்தில் கொண்டுவரவேண்டிய அளவுக்கு நடிக்கிற ஒரு நடிகையைத் தேடிகொண்டிருந்தேன். தீபன் என்கிற கான்ஸ் விருது கிடைத்தபடத்தில் நடித்த காளீஸ்வரி ஸ்ரீநிவாசன், இந்த படத்துக்கு அமைஞ்சாங்க. அந்த படம் பாத்திட்டு இவங்க சரியா இருப்பாங்கன்னு நினைச்சேன். மிகப்பொருத்தமான ஒரு நடிப்பு. என் முப்பது ஆண்டு அனுபவத்தில் இவ்வளவு சந்தோஷமாக அமைந்த ஒரு பாத்திரமாக அவங்களை நினைக்கிறேன்.  பார்வதி பற்றி நாம் சொல்லவே வேண்டாம். நம்ம எல்லோருக்கும் பிடிக்கும். நான் வேற யாரையுமே நினைக்கல. அவங்களைத் தான் அணுகினேன். முடிச்சுகொடுத்தாங்க. டப்பிங் கூட அவங்களே பேசி கொடுத்தாங்க. இந்த படத்துக்கு முதலில் இசையே கிடையாதுன்னு திட்டமிட்டிருந்தேன். அப்படி அனுப்பிதான் எல்லா அவார்டும் கிடைச்சுது. ரிலீஸ் பண்ணலாம்னு நினைக்கும்போது ஒரு இடத்தில் ராஜா சாரைப் பார்த்தேன். அவர் இந்த படத்தைப் பாத்திட்டு, இசை போட்டுக்கொடுத்தார். சிவரஞ்சனி கதைக்கு சிவரஞ்சனி ராகத்திலும் சரஸ்வதிக்கு அதே சரஸ்வதி ராகத்திலும் போட்டுக்கொடுத்தார். அப்படியே மனசை பிசையுறமாதிரி இனிமையான இசை அமைஞ்சது பெரிய வரம்!'' மகிழ்வோடு சொல்லி முடிக்கிறார் இயக்குநர் வஸந்த்.

பிப்ரவரி, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com