katta kusthi
கட்டா குஸ்தி

மல்யுத்தமா, ஜொள் யுத்தமா?

Published on
நம்ம ரேட்டிங்(2.5 / 5)

தமிழ்ப் பசங்களை நம்பி கேரள குட்டிகளை கட்டித் தரலாமா?

ஒரு குஷியான பட்டிமன்ற தலைப்பு போல இருக்கு இல்லையா ? படத்துல கேரள ஆன்ட்டி ஒருத்தரோட ஆதங்கம்தான் இது.

’கட்டா குஸ்தி’ 2022ல செல்லா அய்யாவு இயக்கத்துல விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி நடிப்புல ஹிட் அடிச்ச படம். இந்த ’ பார்ட் 2’ சாட்சாத் அந்தக் கதையோட தொடர்ச்சியேதான்.

மனைவியோட மல்யுத்த மகிமைகளை புரிஞ்சுக்கிட்ட விஷ்ணு விஷால் அவரை பெரிய சாம்பியன் ஆக்குறதுக்காக ஹவுஸ் ஹஸ்பெண்டா மாறி சமையல் அடுத்த அபார்ட்மெண்ட் மாமிகளோட மையல்ன்னு புகுந்து வெளையாடுறார். ஐஸ்வர்யாவோட வளர்ச்சியில அவரோட கோச்சுக்கு பொறாமை. தன்னோட பொறாமையை தீர்த்துக்க விஷ்ணு விஷாலை யூஸ் பண்ணி கணவன், மனைவிக்குள்ள சண்டை மூட்டி விடுறார். பிரச்சினை டைவர்ஸ் வரைக்கும் போகுது. க்ளைமாக்ஸ்ல கணவன், மனைவுக்கு நடுவுல கட்டா குஸ்திங்குற பேர்ல கட்டில் குஸ்தி நடத்தி சுபம் போடுறாங்க.

சுருக்கமா சொல்றதா இருந்தா முதல் பாகத்துல வில்லன்கள்ட்ட இருந்து மனைவி கணவனைக் காப்பாத்துறாங்க. இந்த பார்ட்2 ல வில்லனே கணவன் தான்.

விஷ்ணு, ஐஸ்வர்யா, அவங்க குழந்தை மூனுபேருமே அட்டகாச நடிப்பு.

ஆணாதிக்க வெறியராக வரும் கருணாஸின் நடிப்பு அமர்க்களம். அவரது மனைவி மூலம் டைரக்டர் வைத்த ட்விஸ்ட் அதகளம். காளிவெங்கட்டும், முனீஷ்காந்தும் கூட காமெடிக்கு கைகொடுக்கிறார்கள்.

படத்தின் இன்னொரு கேரள பெண்குட்டியாக வரும் மோஷா சரக்குக்கு சைடிஷ் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறார். கட்டிப்புடி கட்டிப்புடிடா பாட்டுக்கு விஷ்ணு விஷால், குட்டிப்பாப்பா, இந்த மோஷா பீப்பா, காளிவெங்கட், கருணாஸ் இணைந்து ஆட்டம் போடும்போது தியேட்டரே அதிர்கிறது.

இசை ஷான் ரோல்டன். பாடல்கள், பின்னணி இசை ரெண்டுமே சுமார் ரகம்தான். இன்னொரு சத்திய சோதனை படத்துல இருக்கிற அத்தனை பாட்டுகளை ஷானே பாடியிருக்கார். மத்தவங்களுக்கும் கொஞ்சம் சான்ஸ் கொடுங்க சார்.

முதல் பாகத்துல இருந்த சுவாரசியம் இந்த பார்ட் 2 ல மிஸ்ஸிங். ரொம்ப சுலபமா முதல் காட்சியிலயே மொத்தக் கதையையும் யூகிக்க முடிகிற பலவீனமான திரைக்கதை. காமெடிதான் படத்தை காப்பாத்துது.

இந்திய அளவுல சாம்பியன் ஆக தகுதி இருக்கிற மனைவியை கழுத்துல முத்தம் கொடுத்தே விஷ்ணு விஷால் ஜெயிக்கிறதெல்லாம்… யோவ் நடக்குறது மல்யுத்தமா இல்ல ஜொள் யுத்தமா ?

மொத்தத்துல ’கட்டா குஸ்தி 2’ …காமெடியை விட காம நெடி ரொம்ப அதிகம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com