ஷாருக்கான்
ஷாருக்கான்

மலைக்க வைக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்!

ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய நிலவரம் வெளியாகியுள்ளது.

அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கானின் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத், யோகி பாபு, பிரியாமணி என பலர் நடித்திருந்தனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ஜவான் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டில் எந்த ஒரு இந்தி படமும் செய்திராத வசூல் சாதனையை ஜவான் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

கடந்த மாதம் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் ரூ.98 கோடி வசூலித்திருந்த நிலையில், அந்த சாதனையை ஷாருக்கானின் ஜவான் முறியடித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com