எங்களுக்கு சினிமா என்பது கமல்சார்தான்! – அன்பறிவ் நெகிழ்ச்சி!

எங்களுக்கு சினிமா என்பது கமல்சார்தான்! – அன்பறிவ் நெகிழ்ச்சி!

கமலின் 234வது படமான தக் லைஃப் படத்தில் இணைந்து குறித்து சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் மாஸ்டர், “எங்களுக்கு சினிமா என்பது கமல்சார்தான்” என தெரிவித்துள்ளனர்.

மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டைப் பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) கே.ஜி.எஃப். படத்தின் மூலம் தேசி விருது பெற்று பிரபலமானார்கள். தற்போது அன்பறிவ் சகோதரர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் பணியாற்றி வருகிறார்கள்.

கமலின் 234வது படமான தக் லைஃப் படத்தில் அன்பறிவ் இணைந்ததாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் 237வது படத்தினை அன்பறிவ் சகோதர்கள் இயக்குகிறார்கள் என நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.

இந்நிலையில் கமலின் 237வது படத்தினை இயக்குவது குறித்து அன்பறிவு சகோதரர்கள், “இத்தனை நாள்களாக சினிமாவை எங்களது கண்களின் வழியாக பார்த்து வந்தோம். தற்போது சினிமா தன் கண் வழியாக எங்களைப் பார்க்கிறது. எங்களுக்கு சினிமா என்பது கமல்சார்தான். இது எங்களுக்கு வாழ்நாள் சாதனை. சிறந்தவற்றை வழங்குவோம் என சத்தியம் செய்கிறோம்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com