விஜய் - புஸ்ஸி ஆனந்த்
விஜய் - புஸ்ஸி ஆனந்த்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம்!

சென்னையை அடுத்துள்ள பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் வழக்கறிஞர் அணி கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ’விஜய் மக்கள் இயக்கம் சார்பில், முதல் கட்டமாக சென்னையில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்படும் என்றார்.

விஜய் மக்கள் இயக்கத்தில் ஏற்கனவே வழக்கறிஞர் அணி உருவாக்கப்படவில்லை. இன்று அதற்கான முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் புஸ்ஸி ஆனந்த் வரவேற்று வாழ்த்து தெரிவித்து நன்றி தெரிவித்தனர். அதன் பிறகு, கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

தமிழக முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் படித்துக் கொண்டு இருக்கும் மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முதல் கட்டமாக சென்னையில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com