சசிகுமார்
சசிகுமார்

சசிகுமார் இந்த கேரக்டர்ல நடிக்கப் போறாரா…? - தயங்கிய வெற்றிமாறன்!

‘கருடன்’ படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சத்தியம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார், இயக்குநர் வெற்றி மாறன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:

“அது ஒரு கனாக்காலம் படத்தில் வேலை பார்த்தபோது பாலுமகேந்திராவுக்கு ஸ்ட்ரோக் வந்துவிட்டது. மருத்துவமனையில் அவருக்கு எல்லா உதவிகளையும் செய்தவர் இயக்குநர் துரை செந்தில்குமார். பாலுமகேந்திரா வீட்டுக்கு வந்த பிறகும்கூட அவருடனே தங்கி, அவரைக் கழிப்பிடத்துக்குக் கூட்டிச்செல்வது, குளிப்பாட்டி சுத்தம்செய்வது என இருந்தவர் துரை செந்தில்குமார்.

“எப்படிடா இதையெல்லாம் செய்ற” என செந்திலிடம் கேட்டதுக்கு, “அப்பா இருந்தால் இதெல்லாம் செய்யமாட்டோமா?”. என்றான்.

கருடன் கதையை செந்தில் என்னிடம் சொன்னபோது, சில தகவல்களைக் கொடுத்தேன். சசிகுமாரை இந்தப் படத்தில் நடிக்க வைப்பதாக செந்தில் சொன்னபோது, “அவர் எதுக்குப்பா… இது முக்கியமான ரோல்தான்... அவர் ஏன் பண்ணப்போறார்.” என்றேன். கதையைக் கேட்டதும் சசிகுமார் ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவர் சூரிக்காக நடிக்க ஒப்புக் கொண்டதாக செந்தில் சொன்னார். இந்தப் படத்தில் சசிகுமாரின் ரோல் முக்கியமானது. எல்லா நடிகர்களும் நல்லா நடித்திருக்கிறார்கள்.” என்று வெற்றிமாறன் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com